தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான New Guidelines அரசு வெளியிட்டது!

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 1, 2021, 03:41 PM IST
  • கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்.
  • ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்.
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம்.
  • சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான New Guidelines அரசு வெளியிட்டது! title=

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (coronavirus treatment protocol) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மூன்று வகையாக பிரித்து தொடர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை (coronavirus treatment update) தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம். 

ALSO READ |  விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

1. கொரோனா (COVID-19) உறுதி செய்யப்பட்டு நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போரை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும். பாரசிட்டமல் , ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். 

2. ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 வரை இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள  கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம்.

3. ரத்தத்தில் ஆக்சிஜன் (blood oxygen levels) அளவு 90-க்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சையைத் தொடர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ |  கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News