அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பிய ஸ்டாலின்

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு நபர் அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கிறது" என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2020, 03:21 PM IST
அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பிய ஸ்டாலின் title=

சென்னை: அமெரிக்கா ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஆகியோர் உலகத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகளைப் பெற்று வருகின்றனர். கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கூறி, தமிழில் ஒரு வாழ்த்து கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளதாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ட்வீட் செய்துள்ளார். 

"தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு நபர் அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கிறது" என்று அந்தக் கடிதம் கூறுகிறது.

 

ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில், திராவிட இயக்கத்தின் (Dravidian Movement) அரசியல் சித்தாந்தம், முன்முயற்சிகள் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்ட அவர், ஹாரிஸின் வெற்றி அத்தகைய இயக்கத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியுள்ளார். 

ALOS READ | வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை

கமலா ஹாரிஸின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா மேலும் புகழ் பெற வேண்டும் என்று கூறிய திமுக தலைவர், இது தமிழ் பெருமையை உலக அளவில் கொண்டு செல்லும் என்றும் குறிபிட்டுள்ளார். 

கமலா ஹாரிஸுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருவதற்காக தான் இந்தக் கடிதத்தை தமிழில் எழுதியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ALOS READ |  கமலா ஹாரிஸ் உறவினர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள US பயணம்..!!!

கமலா ஹாரிஸின் தாத்தா தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசெந்திராபுரம்-பைனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News