திருப்பதி கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

Last Updated : May 20, 2019, 11:23 AM IST
திருப்பதி கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்! title=

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

இந்தியாவின் 17-வது மக்களவையின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

இந்த சூழ்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் செய்ய நேற்று இரவு திருப்பதி சென்றிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது. அதன்பின் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

Trending News