குறையும் மஞ்சள் சாகுபடி: விலை உயரும் என எதிர்பார்க்கும் விவசாயிகள்

10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில்  எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 13, 2024, 01:13 PM IST
  • மஞ்சள் சாகுபடியில் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு.
  • கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி குறைந்து கொண்டே வந்தது.
  • மஞ்சள் சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.18000 முதல் 19000வரை விற்பனையாகிறது.
குறையும் மஞ்சள் சாகுபடி: விலை உயரும் என எதிர்பார்க்கும் விவசாயிகள்  title=

கோபி பகுதியில் மஞ்சள் சாகுபடியில் பருவநிலை மாற்றத்தால் போதிய விளைச்சல் இல்லாத நிலை உள்ளது. மஞ்சளின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை குறைந்துகொண்டே வருகின்றது. 

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளான பாரியூர், நஞ்சை கோபி, வெள்ளாளபாளையம், புதுக்கரைபுதூர், கூகலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள்  ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்  மஞ்சள் சாகுபடி செய்து வந்தனர். 

இந்நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக மஞ்சளுக்கு போதிய விலை இல்லாததால்  மஞ்சள் சாகுபடி குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மஞ்சள் சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் நான்கு ஏக்கர் சாகுபடி செய்து வந்த விவசாயிகள் ஒன்று, இரண்டு ஏக்கர் மட்டுமே மஞ்சள் சாகுபடியை தொடங்கி மஞ்சள் சாகுபடிக்கான உழவுபணி, விதை மஞ்சள், உரம், மருந்து தெளித்தல் என முதலீடு செலவு செய்து மஞ்சள்  சாகுபடியை தொடங்கினர். 

இதில் சாகுபடியை தொடங்கிய சில மாதங்களிலே போதிய மழை இல்லாத்தால் பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மஞ்சள் பயிரில் சரியான விளைச்சல் இன்றி காணப்பட்ட மஞ்சள் தற்போது அறுவடைக்கு தயாரகி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம்: ஓ. பன்னீர்செல்வம்

10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில்  எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது. 

மஞ்சள் சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.18000 முதல் 19000வரை விற்பனையாகிறது. ஆனாலும் மஞ்சளுக்கு விவசாயிகள் எதிர்பார்த்த விலை இல்லை விலை இருக்கும்போது விளைச்சல் இல்லை. எனவே வரும் நாட்களில் மஞ்சளுக்கு  இன்னும் விலை அதிகரிக்கும் என எதர்பார்ப்பதாகவும் அப்படி மஞ்சள் விலை உயர்ந்தால் மட்டுமே மஞ்சள் சாகுபடியின் முதலீட்டு செலவுக்கு ஈடுசெய்ய முடியும் எனவும் விவசாயிகள் கருதுகிறார்கள்.  ஆகையால், தற்போதைய சூழலில் மஞ்சள் விலை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் மஞ்சள் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மஞ்சளுக்கான எதிர்பார்த்த விலை இல்லை என்பதால் விவசாயிகள் கவலை தெரிவத்தனர்.

மேலும் படிக்க | மகள் வரலட்சுமிக்காக பாஜகவில் ஐக்கியமானாரா சரத்குமார்? சூடுபிடிக்கும் என்ஐஏ விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News