கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு..!

திருச்செங்கோடு அருகே மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 3, 2022, 01:41 PM IST
  • கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு
  • கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம் ?
  • மெடிக்கல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு..! title=

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள கொசவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான ரம்யா. இவரது கணவர் பிரகாஷ். கர்ப்பமாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மார்ச் 27ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதில், சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். 

Pregnant woman

மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் வளர்மதி ஆலோசனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து விசாரணை தீவிரம் எடுத்தது.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ரம்யா வசித்த வந்த பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில்,  மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் அவர் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக தெரியவந்தது. அதன் விளைவாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று சந்தேகத்தை எழுப்பியது.

நாமக்கல்

உடனே சம்பந்தப்பட்ட மருந்தகத்தை சோதனையிட தேடி சென்றபோது கடை பூட்டியிருந்தது. கடை உரிமையாளரை தொடர்புகொண்டு பேசி, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொடுத்திருக்கிறார். விசாரணைக்கு நேரில் அழைத்தும் வராததால் அதிரடி நடவடிக்கையாக மார்ச் மாதம் 31ம்தேதி அன்று கடைக்குச் சீல் வைக்கப்பட்டது. 

கொசவம்பாளையம்

இதற்கிடையே, மறுநாள் காலை தனியார் மருந்தகத்தின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையிலிருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை மட்டும் எடுத்து சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் முத்துசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்யா இறப்பில் உள்ள மர்மங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரமா ?

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கையில்... 

கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து தற்போது தாய்மார்கள் கருகலைப்பு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பயிற்சி பெறாத மருத்துவர், அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் மற்றும் மரணம் வரை கொண்டு செல்கிறது. 

7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். மேலும் 10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்கு தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். 

எனவே, தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  
என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News