கன்னியாகுமரி மழை வெள்ளத்தில் சிக்கிய 250 குடும்பங்கள்!!

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி சிக்கியுள்ளன 250 குடும்பங்கள் மீட்கும் நடவடிக்கையை எஸ்.சி.ஆர்.எப் மேற்கொண்டுள்ளது.

Last Updated : Dec 1, 2017, 08:09 AM IST
கன்னியாகுமரி மழை வெள்ளத்தில் சிக்கிய 250 குடும்பங்கள்!! title=

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று கன்னியாக்குமரியில் ஓகி புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்து நான்கு பேர் பலியாகினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் போல அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளத்தி. இந்நிலையில், மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் சிக்கியுள்ளன 250 குடும்பங்கள் மீட்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எஸ்.சி.ஆர்.எப் குழுவினர்.

ஓகி புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் மிக மிக கன மழை பெய்யக் கூடும் எனவும், தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிறுத்தப் பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Trending News