TR Balu About Annamalai: தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் தஞ்சை பழைய பேருந்துநிலையம் மைதானத்தில் நேற்றிரவு (மே 2) நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பேசும்போது, "பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லியில் உள்ள என்னை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துக்கூறி, துறை அமைச்சரிடம் பேசி, கடிதம் அனுப்பி அந்த ஏலத்தை நிறுத்த வைத்தோம்.
இப்போது யார் யாரோ பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர். அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் என்னை குறித்தும் பேசியுள்ளார். நான் 10 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளார். அண்ணாமலைக்கு சூடு, சொரனை, மானம் இருந்தால், நீதிமன்றத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
இப்போது நான் நோட்டீஸ் கொடுத்து 12 நாட்களாகி விட்டது. இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால், அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்துவிட்டேன். வரும் மே 8ஆம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர உள்ளேன். அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும்.
அரசியல் நாகரீகம் என்பது முன்பு இருந்தது. இப்போது நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் உள்ளனர். பாஜகவில் சேருபவர்கள் எல்லாம் போலீஸாரால் தேடப்படுவர்கள்தான். இது போன்ற ஆட்களை ஏன் சேர்க்கிறார்கள் என்றால் வரும் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தான். அதை திமுகவினர் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் நாம் செயல்பட வேண்டும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது. அதை நீங்கள் செய்தால் இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி. திமுகவால் உருவாக்கப்பட்ட எஃகு கோட்டை. கோட்டையை பார்த்து விமர்சனம் செய்தால், நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். ஆனால் கோட்டையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால், எங்களை தொட்டுப்பார்க்க நினைத்தால் என்ன நடக்கும் எனத் தெரியாது.
திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ எந்த கொம்பனாலும் முடியாது. நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். பாஜக அண்ணாமலையை குறித்து யாரும் பேச வேண்டாம், திமுகவில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் கூட பேச தகுதி இல்லாதவர் தான் அண்ணாமலை" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ