நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு...!
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா கலந்துகொண்டார். அப்போது மசூதி இருக்கும் ஒரு தெருவின் வழியே ஊர்வலம் செல்லவதை போலீசார் தடுத்துள்ளனர். அப்போது, வழிவிடச்சொல்லி போலீசாரையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடி எழுந்தது.
காவல்துறை ஆய்வாளர் மனோகர் கொடுத்த புகாரின் பேரில், எச் ராஜா உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது, காவல்துறை பணியை செய்யவிடாமல் தடுத்தது, இரு பிரிவுகளின் இடையே மோதலை தூண்டும் படி செயல்பட்டது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...!