புகழ்பெற்ற அத்தி வரதர் கோவில்: புரத்தில் உலக பிரசித்திப்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அத்தி வரதர் கோவில் என்றும் அழைக்கலாம். இந்த பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கோவிலிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்:
மேலும் சாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திகடனை செலுத்துவதற்கு வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளமூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள 7 நிரந்தர உண்டியல் உட்பட திருக்கோயில் வளாகத்தில் 10 உண்டியல்களும், வெளி பிரகாரத்தில் மூன்று உண்டி என மொத்தம் 13 உண்டில்கள் வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காணிக்கை எண்ணும் பணி:
அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேறிடவும், நிறைவேறிய நேர்த்தி கடனுக்காகவும், சாமிக்கு காணிக்கை செலுத்தும் விதமாக ரொக்கப்பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். மேலும் அவ்வாறு கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
மேலும் படிக்க | விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறங்க போய்விட்டார்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விமர்சனம்
45 லட்சம் மேல் ரொக்க பணம்:
அந்த வகையில் அத்தி வரதர் கோவிலில் தற்போது மூன்று மாதங்களுக்கு பிறகு 13 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணும் பணியானது கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணியில் கோவில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டதில் 45 லட்சத்து 24 ஆயிரத்து 421 ரூபாய் ரொக்கமாகவும், 55 கிராம் தங்கமும் 563 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை:
பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த முறை உண்டியல் திறப்பின் போது 32 லட்சம் ரூபாய் ரொக்கமாக உண்டியல் காணிக்கையாக பக்தர்களிடம் பெறப்பட்ட நிலையில் தற்போது 45 லட்சத்து 24 ஆயிரத்து 421 ரூபாய் ரொக்கமாக பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதால் கூடுதலாக தற்போது 13லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தி வரதர்:
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி சிறீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மேடையிலேயே நேருக்கு நேராக கேஎன் நேரு வைத்த கோரிக்கை.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
வி