காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?

"கார்த்தி சிதம்பரம் மாதிரியான ஆட்கள் மற்ற வளரும் காங்கிரஸ் கட்சியினரை அடக்குகிறார்கள். ப.சிதம்பரத்தை தலைவராக்க ஒரு குழு முயல்கிறது."

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 13, 2022, 09:50 PM IST
  • சோனிகா, ராகுல், பிரியங்கா காந்தி கட்சியை விட்டு விலக முடிவு எனத் தகவல்
  • குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 பேர் ராகுலுக்கு எதிர்ப்பு
  • ப சிதம்பரம் தலைவராக ஆசைப்படுவதாக தகவல்
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?  title=

காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது சோனிகா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த 23 பேரும் இரு தினங்களுக்கு முன்பு கூடி டெல்லியில் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

file photo

உத்தரபிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு 387 இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாபிலும் ஆட்சியையும் இழந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியே ஆட்டம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் குறித்து தெரிந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடமும், ராகுல் காந்தி ஆதரவாளர்களிடமும் பேசினோம். 

மேலும் படிக்க | ஆந்திராவில் அனைத்து அமைச்சர்களும் மாற்றம்: நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி?

அப்போது, “”60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு படு வீழ்ச்சியை சந்தித்தது. மூத்த நிர்வாகிகள் யாரும் களத்தில் இறங்க தயாராக இல்லை. மக்களுக்காக அவர்களுக்கு எப்படி வீதிகளில் போராட வேண்டும் என்று தெரியவில்லை. ராகுல் காந்தி அனைவரையும் ஆடி ஓடி வேலை செய்ய சொல்கிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளே எதிர்க்கிறார்கள். பாஜகவை எதிர்க்கும் மூத்த நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்ப்பதில்லை. திராவிடம் மாடல் போல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உருவாக்க ராகுல் முயல்கிறார். அதனால் தான் அவரை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பிரியங்கா காந்தி கோவில் செல்கிறார். இந்துக்களை கவர முயற்சிக்கிறார். ஆனால் ராகுல் காந்தி அப்படி எதையும் செய்வதில்லை. 

Sonia Gandhi

பரப்புரைக்கு கூட எந்த மூத்த நிர்வாகிகளும் செல்லவில்லை. அனைத்து மாநிலத்துக்கும் ராகுல் காந்தி மட்டுமே பயணம் செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல. ஹிந்துத்துவாவை எதிர்ப்பதால் ராகுலுக்கு எதிர்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலை கிளப்ப நினைக்கிறார்கள். கார்த்தி சிதம்பரம் மாதிரியான ஆட்கள் மற்ற வளரும் காங்கிரஸ் கட்சியினரை அடக்குகிறார்கள். ப.சிதம்பரத்தை தலைவராக்க ஒரு குழு முயல்கிறது. அதற்காக கட்சிக்குள் பல ஸ்லீப்பர் செல்கள் செயல்பட்டு வருகின்றனர். குலாம்நபி ஆசாத் போன்றவர்கள் ப,சிதமபரத்தை தலைவராக்க நினைக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஆசை அவருக்கு உண்டு. பிரதமராகும் ஆசையுடன் அவர், வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை மறந்திருக்க மாட்டோம்.” என்று பேசி முடித்தனர்.

மேலும் படிக்க | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 14ம் தேதி தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News