கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை CM மோடிக்கு கடிதம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறைக்கு நாராயணசாமி கடிதம்!

Last Updated : Feb 16, 2019, 12:17 PM IST
கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை CM மோடிக்கு கடிதம்!  title=

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறைக்கு நாராயணசாமி கடிதம்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது, கடந்த புதன்கிழமை துவங்கிய போராட்டம் தொடர்ந்து  நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு திரும்பி மக்கள் நலதிட்டங்களை நிறைவேற்றும் வரை ஆளுநர் மாளிகை எதிரே நடைபெற்று வரும் தர்ணா போராட்டம் தொடரும் என்றார்.

இதை தொடர்ந்து, பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இங்குள்ள சூழல் குறித்து கடிதம் எழுதியுள்ளேன். காந்திய வழியில் அமைச்சர்களும், நானும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் நலத் திட்டங்களை கிரண்பேடி தடுத்து நிறுத்துகிறார். வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டைப் போடுகிறார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். இதுவரையில் யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இங்குள்ள சூழல் குறித்து கடிதம் எழுதியுள்ளேன்.

அவர், இந்தப் போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் தற்காலிக ஆளுநரை நியமித்து கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார். 

 

Trending News