வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு"

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி எண் 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 05:51 PM IST
  • வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு.
  • தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் பல கிராமங்களில் "சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு" title=

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் : 

தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு , கணினிப் பயிற்சி , போன்றவை பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி செயல்படுத்தப்படும்.

ALSO READ : Gold Rate Today, September 8: இன்றைய விலை நிலவரம் இதோ!!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்கு தற்போது தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை தொடர்ந்து இன்னும் 4 புதிய நீதிமன்றங்களை சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிறுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் "இந்த நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி முறையான நிவாரணம் வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் "சமத்துவம் காண்போம் என்கிற தலைப்பில் காவல்துறை , வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் "சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது. என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது.இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த பட்சமாக 1 இலட்சம் ரூபாயும் அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள்ளார்.

ALSO READ : பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News