நவம்பர் 6,7 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், நவம்பர் 7,8 ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல
வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....!
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், வம்பர் 6,7ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், நவம்பர் 7,8 ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். நவம்பர் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இதேபோன்று ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.