சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் அறிமுகம்! கட்டணம் விவரம் உள்ளே!

சென்னை மெட்ரோவில் ஒரு மாதம் முழுவதும் பயணம் செய்யும் வகையில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Last Updated : Mar 16, 2019, 11:42 AM IST
சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் அறிமுகம்! கட்டணம் விவரம் உள்ளே! title=

சென்னை மெட்ரோவில் ஒரு மாதம் முழுவதும் பயணம் செய்யும் வகையில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்திற்கு எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யும் விதமாக மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கட்டணம் ரூ.2500. அதன்படி ரூ.2,500 மற்றும் முன்பணம் ரூ.50 செலுத்தி இந்த அட்டை பெற்றுக் கொள்ளலாம்.  

இதில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம். இந்த அட்டை அலுவலக வேலைக்கு செல்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News