கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மதியம் முதலே பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, தியாகராயநகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!
தமிழகம், பாண்டிச்சேரி பகுதியில் தென் மேற்கில் இருந்து மேற்கு திசை நோக்கி 45 புள்ளி 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச உள்ளதாகவும் இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
எனவே கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...!