பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர்..!

சென்னையில் மீண்டும் பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 6, 2023, 08:37 AM IST
  • மீண்டும் பெண் காவலரிடம் அத்து மீறிய திமுகவினர்.
  • கைது செய்த காவல்துறையினர்.
  • தொடரும் அட்டூழியம்.
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர்..!  title=

சென்னை ராமாபுரத்தில், கோவில் திருவிழா நடைப்பெற்றது. இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். 

கோவில் திருவிழாவில் அட்டூழியம்!

சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு அக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளனானோர் கலந்து கொண்டனர். கோவில் திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டிருந்தனர். இவ்விழாவில் பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், பெண் காவலர்கள் அதிக அளவில் கோவிலுக்கு பிற்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். 

மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 155 வது வார்டு திமுக அவைத்தலைவர் கர்ணன் என்பவரின் மகன் கண்ணன். இவர் அப்பகுதியில்  திமுக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு மது போதையில் இருந்த கண்ணன், கோவில் திருவிழாவில் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவரிடம் இவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண். காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து,  உடனடியாக கண்ணனை உதவிய ஆய்வாளர் பிடித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றார். 

கைது செய்ய விடாமல் அராஜகம்:

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட திமுக பிரமுகரை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றவுடன் அங்கு திமுகவினர் திரண்டனர். 
154 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜி முன்னாள் கவுன்சிலர் சண்முகம் உள்ளிட்ட திமுகவினர் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு கும்பலாக வந்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட கண்ணனை கைது செய்யக்கூடாது எனவும் அவர் மீது புகார் கொடுக்கக் கூடாது எனவும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டன். மேலும், பாதிக்கப்பட்ட பெண் காவலரை புகார் கொடுத்த விடாமல் தடுத்துள்ளனர். இதனால் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜே புகார் கொடுத்து, அந்த புகாரின் பேரில் கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். 

தமிழகம் முழுவதும் திமுகவினர்களால் பெண் காவலர்கள் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு! 

ராமபுரத்தில் நடந்த இந்த சம்பவம் பலருக்கும் பாதுக்காப்பிற்கான பயதை ஏற்படுத்தியுள்ளது. இதே போல ஏற்கனவே விருகம்பாக்கத்தில். திமுக எம்பி கனிமொழி அமைச்சர் மற்றும் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை திமுகவினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த நிலையில் மீண்டும் திமுக நிர்வாகி பெண் காவலரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பெண் காவலர்கள் மீது திமுக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.  

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சிக்கியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News