ஸ்பா, மசாஜ் சென்டர்களில் CCTV கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும்: நீதிமன்றம்

ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 08:21 PM IST
ஸ்பா, மசாஜ் சென்டர்களில் CCTV கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும்: நீதிமன்றம் title=

மதுரை: ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவு செய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ்,  ஸ்பா நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் ஸ்பா தொடங்குவதற்காக தடையில்லா சான்று வழங்கவும், அதற்கு தடையில்லா சான்று வழங்கவும் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஸ்பா தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான சரியான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார்.

madurai high court

இந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு நீதிபதி, ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அது இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடன், சட்டவிரோத செயல்களுக்கு இடம் கொடாமல் நடத்தவேண்டும். சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டுள்ளார்.

CCTV camera placing in spa

ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது. நபர்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம். இந்த விவகாரங்களில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

CCTV camera placing in spa and massage

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News