புது ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை போட்ட தொழிலதிபர்!

கேரளாவில் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை செய்த வினோத சம்பவம் அங்கேறியுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 26, 2022, 03:25 PM IST
  • ஹெலிகாப்டருக்கு பூஜைப் போட்ட தொழிலதிபர்
  • ரூ.100 கோடி மதிப்பிலான புதிய ரக ஹெலிகாப்டர்
  • குருவாயூர் கோவில் மைதானத்தில் சிறப்புப் பூஜை
புது ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை போட்ட தொழிலதிபர்! title=

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கை பிறருக்கு வேடிக்கையாக இருக்கலாம். அதுபோல், உலகில் பலரின் நம்பிக்கைச் சார்ந்த செயல் பிறருக்கு வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. கேரளாவில் தொழிலதிபர் ஒருவரின் நம்பிக்கை தற்போது இணையத்தில் வைரலாகிறது. பொதுவாக புதிதாக வாகனத்தை வாங்கினால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் முதன்முதலில் கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்வர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க இந்த பழக்கம் பெருமளவில் இருந்து வருகிறது. புது பைக், புது கார், புது சைக்கிள் என இதுவரை கோவிலில் பூஜை செய்து பார்த்திருப்போம். கேரள மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டரை கோவிலுக்கு எடுத்து வந்து பூஜை செய்துள்ளார். 

மேலும் படிக்க | காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒரு விமானி உயிரிழந்தார்

ரவி பிள்ளை என்ற தொழிலதிபர் புதிதாக ஹெலிகாப்டர் ஒன்று வாங்கியுள்ளார். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள H 145 D3 வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டரை கேரளா மாநிலம் குருவாயூருக்கு ரவி பிள்ளை எடுத்துவந்தார். அங்குள்ள கிருஷ்ணா மைதானத்தில் வைத்து அந்த ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை செய்யப்பட்டது. பின்னர், ஹெலிகாப்டரின் முன்பக்கத்தில் சந்தனம், குங்குமம் தடவி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டருக்கு தீபாராதனை காட்டப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இதுவரை தொழிலதிபர்கள் பல பூஜைகளைச் செய்து வந்த நிலையில், வாகன பூஜை செய்தவர் என்ற புகழ், தொழிலதிபர் ரவி பிள்ளையையே சாரும்.! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News