பஸ் கட்டண உயர்வு: விஜயகாந்த் பேருந்து பயணம்!

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேருந்தில் பயணம்.

Last Updated : Jan 29, 2018, 05:02 PM IST
பஸ் கட்டண உயர்வு: விஜயகாந்த் பேருந்து பயணம்! title=

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேருந்தில் பயணம்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 20 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றார். அவர் பேட்டி அளித்த சிறுது நேரத்தில், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பில் பர்வேறு எதிர்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டுனர். அந்த வகையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்திற்கு பேருந்தில் பயணம் செய்தார் விஜயகாந்த்.

Trending News