மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தின் முன்னாள் முதவரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆக., 7-ஆம் நாள் உயிரிழந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
60 ஆண்டுகள் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்த நிகரற்ற, ஒப்பற்ற தலைவர் டாக்டர் @kalaignar89 அவர்களுக்கு பிரதமர் @narendramodi தலைமையிலான இந்திய அரசு ‘பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென என் சார்பிலும், @INCTamilNadu தமிழ் மக்கள் சார்பிலும், pic.twitter.com/VXrVCoLzzx
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) August 10, 2018
கலைஞரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, தொண்டர்கள் அவரது சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தனது தொகுதி மக்கள் சார்பில் விரைவில் வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருதும், தமிழக அரசு சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதி அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.