இந்தியா முழுவதும் 2005 ஆம் ஆண்டு முதல் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 10 ரூபாய் நாணயங்களின் புழக்கம் அதிகரித்தது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்புக்குப் பிறகு 10 ரூபாய் நாணயங்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்தது. இருப்பினும், இந்த நாணயங்களை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நாணயங்கள் செல்லாதவை என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக பதித்துவிட்டது. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை எந்த கடைகளில் கொடுத்தாலும் வாங்குவதில்லை. மக்கள் வாங்க தயக்கம் காட்டுவதால், வியாபாரிகளும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.
மேலும் படிக்க | குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!
மேலே குறிப்பிட்ட சில மாவட்டங்களைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களிலும் இதே பிரச்சனை இருப்பதாகவும் பேருந்து நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர். பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்தால் பத்து ஆண்களில் ஓரிருவர் தவிர மற்ற யாரும் வாங்குவதில்லை என்றும், பெண்கள் ஒருவர் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். சென்னையை தவிர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இப்பிரச்சனை தொடர்வதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனர்.
கொஞ்சம் நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விடுத்த அறிவிப்பில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க ஒருவர் மறுத்தால், இந்திய தண்டனை சட்டம் 124-ன் படி குற்றம். இதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அதேபோன்ற எச்சரிக்கையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் விடுத்திருக்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விடுத்திருக்கும் எச்சரிக்கையில், 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கும் கடை உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்கள் குறித்து பரவி வரும் வதந்திகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. நம் நாடான இந்திய அரசு வெளியிடும் நாணயத்தின் மீது மக்களுக்கு இருக்கும் இந்த சந்தேகத்தை போக்க அரசு சார்பில் கட்டாயம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ