மோடி குறித்த பழைய ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!

கடந்த 2018-ம்  ஆண்டு அப்போது காங்கிரஸில் இருந்த நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  என்ன நடந்தது? குஷ்புவிற்கு சிக்கல் வரும் அளவிற்கு அவர் செய்த ட்வீட் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 26, 2023, 12:46 PM IST
  • வைரலாகும் குஷ்பூவின் பழைய ட்வீட்.
  • மோடி குறித்து பதிவிட்டு இருந்தார்.
  • காங்கிரஸ் கட்சியினர் இதனை வைரல் செய்து வருகின்றனர்.
மோடி குறித்த பழைய ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!  title=

ராகுல் காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று லலித் மோடி, நீரவ் மோடி மற்றும் பிரதமர் நரேந்திர மோதியை தாக்கி பேசியிருந்தார். இதனை அடுத்து ராகுல் காந்தி மீது குஜராத் எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.  இந்த தண்டனையை அடுத்து ராகுலை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர்  உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' - கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

இந்த உத்தரவை அடுத்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை குஷ்புவின் பழைய ட்வீட் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் ஷேர் செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் குஷ்பூ பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு குஷ்பூ தனது ட்விட்டரில்," மோடி என்ற பெயர் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். இனி மோடி என்றாலே ஊழல் என்று மாற்றி விடலாம அதுதான் பொருத்தமாக இருக்கும் . நீரவ் மோடி, லலித் மோடி, நமோ =  ஊழல் என கடந்த 2018 ஆம் ஆண்டு எழுதி இருந்தார். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு குஷ்பூ பாஜகவில் இணைந்தார்.  தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.  

 

குஷ்புவின் இந்த ட்விட்டை காங்கிரஸ் கட்சியினர் ஷேர் செய்து அவருக்கு எதிராக எழுதி வருகின்றனர். தேசிய அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் குஷ்பூ சுந்தர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தற்போது குஷ்பூ தன்னுடைய ட்வீட் குறித்தும்,  ஹேட்டர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில், " நான் என் ட்வீடை டெலிட் செய்ய மாட்டேன். இதுபோல நிறைய ட்வீட் உள்ளது. வேலை இல்லாத காங்கிரஸ் கட்சியினர் இந்த பழைய ட்விட்டை எல்லாம் எடுத்து பேசட்டும்.  காங்கிரஸ் கட்சியினர் என்னையும் ராகுல் காந்தியையும் ஒன்றாக ஒப்பீட்டு பேசுகின்றனர்.  ராகுலுக்கு இணையாக மரியாதையும், பெயரையும் சம்பாதித்துள்ளேன்.  அவரை தான் எதிர்க்கட்சி என்கின்றனர்.  அவரை தான் தேசிய தலைவர் என்கின்றனர்.  அவரோடு என்னை ஒப்பிட்டது மகிழ்ச்சி. நன்றி காங்கிரஸ்.  என காட்டமாக தன்னை விமர்சித்தவர்களுக்கு கூலாக குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கும் வந்தது நற்செய்தி... அகவிலைப்படி உயர்வு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News