கைக்கோர்க்கும் OPS, EPS - டெல்லியில் இருந்து சீக்ரெட் மெசேஜ்... பாஜக கணக்கு என்ன?

Erode East Bypolls: அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜகவினர் இன்று சந்தித்த நிலையில், அதுகுறித்து பாஜகவின் சி.டி. ரவி, அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2023, 02:18 PM IST
  • இபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.
  • 'கூடிய விரைவில் தர்மம் வெல்லும்' - ஓபிஎஸ்
  • டெல்லியில் இருந்து ஜே.பி. நட்டா இருவருக்கு செய்தி அனுப்பியுள்ளார் - பாஜக தரப்பு
கைக்கோர்க்கும் OPS, EPS - டெல்லியில் இருந்து சீக்ரெட் மெசேஜ்... பாஜக கணக்கு என்ன? title=

Erode East Bypolls OPS vs EPS: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாயலயத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான  சி.டி ரவி,"தீய சக்திகளை வீழ்த்த 1972இல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். இப்போதும் அதற்கான தேவை உள்ளது. ஒரு குடும்பமாக, தமிழக மக்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. தமிழ் மக்களும் திமுகவிற்கு எதிராக உள்ளனர்.

பண பலம் ஆட்சி அதிகாரத்தை தவறாக ஈரோட்டில் பயன்படுத்தி வருகின்றனர். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை. ஈரோடு தேர்தல், தமிழக பிரச்சனைகள் குறித்து இருவரிடமும் (ஓபிஎஸ், இபிஎஸ்) கலந்து பேசினோம். இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிப்போம். இருவரும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

திமுகவை வீழ்த்த, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் நிலை. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அனுப்பிய செய்தியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். அது என்ன என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது" என தெரிவித்தார். 

தொடர்ந்து, பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,"விலைவாசி உயர்வால் மக்களிடம் திமுக கெட்ட பெயர் எடுத்துள்ளது. ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் வரும் 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் இருப்பதனால், அதுவரை பொறுமை காக்கவும்" என தேர்தல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும்,"ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜகவிடமிருந்து எந்தவொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகவில்லை. தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளர் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளோம்" என்றார். 

மேலும் படிக்க | 40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ; அண்ணா!

'கூடிய விரைவில் தர்மம் வெல்லும்'

முன்னதாக, பாஜக சார்பில் சி.டி. ரவி, அண்ணாமலை அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதனை தள்ளிவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாஜக போட்டியிடுவதாக இருந்தால், தனது தரப்பு வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்றும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்னர் தெரிவித்திருந்தார். மேலும், இன்று அண்ணாமலையை சந்தித்த பின்னர் ஓபிஎஸ்,'கூடிய விரைவில் தர்மம் வெல்லும்' என தெரிவித்திருந்த நிலையில், விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News