இந்த ஆண்டு இறுதிக்குள் பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் காலங்களில் சென்னையில் பேட்டரியில் இயங்கும் பேருந்துக்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய அரசிடம் இருந்து 50% மானியம் வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி அணியில் இணைவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்புகையில், தினகரன் அழைத்தால் நாங்கள் செல்லமாட்டோம், முதல்வர் தலைமையில் தான் நாங்கள் செயல்படுவோம் என தெரிவத்தார்!