கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பாகுபலி என்ற காட்டுயானை உள்ளது. பெரிய தந்தத்துடன் இருக்கும் இந்த யானைக்கு மக்கள் வைத்த பெயர் தான் பாகுபலி. இந்த யானை கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள்ளும் விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக சமயபுரம், நெல்லிதுறை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது.
மேலும் படிக்க | விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.., போலீஸார் விசாரணை..!
இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ’பாகுபலி’ சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது. தகவலை அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது டார்ச்சு லைட்டுகளை வைத்து வனத்துறை ஊழியர்கள் பாகுபலியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது, காட்டுயானை பாகுபலி திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அங்கிருந்து தள்ளிச் சென்றனர். இதுவரை காட்டுயானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் நேற்று வனத்துறையினரையே காட்டு யானை பாகுபலி தாக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR