திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் இருப்பதாகவும், அதை குறைந்து விலைக்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன், நண்பர் கார்த்திக் என்பவருடன் கடந்த 18 ஆம் தேதி 14.50 லட்சம் பணத்துடன் காரில் திருச்சி துவரங்குறிச்சி வந்துள்ளார். திருச்சி துவரங்குறிச்சி வந்த ஜியாவுதீன் வெளிநாட்டு தங்கம் வாங்க பணத்துடன் வந்திருப்பதாக அன்வர் பாஷாவுக்கு போன் செய்தார்.
மேலும் படிக்க | ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி!
சிறிது நேரத்தில் காக்கி உடையில், வேறொரு காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், தஞ்சாவூரில் இருந்து வந்த ஜியாவுதீன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணத்தைப் பறித்து சென்றனர். சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுபடி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி பணம் பறித்த மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வளநாடு அருகே டி. பொருவாய் பகுதியில் சந்தேகப்படும்படி, காரில் நின்று கொண்டிருந்த அனிஷ் , ஜேம்ஸ், பெருமாள், சக்திவேல், சரவணன் ஆகிய நான்கு பேரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை, மணப்பாறை பகுதிக்கு வரவழைத்து 10.50 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கார், 100 கிராம் தங்க கட்டி, 10 போலிதங்கக் கட்டிகள், 21 மொபைல் போன்கள், 12 சிம் கார்டுகள், 2 போலி பதிவு எண் பலகைகள், அரசு முத்திரையுடன் கூடிய சிவில் ஜட்ஜ் என்ற லோகோ மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ