ஜெ., நலம் : அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி பேட்டி

Last Updated : Nov 4, 2016, 04:06 PM IST
ஜெ., நலம் : அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி பேட்டி title=

அப்பல்லோவின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி "ஜெயலலிதா குணமடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.

இன்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிததார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல் அமைச்சர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் தன்னி சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை உணர்ந்து இருக்கிறார். எப்போது வீட்டு திரும்புவது என்பது குறித்து முத ல்வரே முடிவு செய்வார். அவர் எப்படிப்பட்டவர் என்பது பத்திரிகையாளர் உங்களுக்கு நன்கு தெரியும் என அவர் கூறினார்.

முதல் அமைச்சர் உடல் நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறை கொண்ட சிறப்பு வார்டுக்கு மாற்ற திட்டமிட ப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓர் இரு நாட்களில் முதல் அமைச்சர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படலாம் என நம்பதகுந்த தகவல் வந்துள்ளன.

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக் டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு நல் ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News