மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி செல்ல பிராணிகளுக்கும் எரிவாயு தகன மேடை!

முதல் முறையாக தென் இந்தியாவிலேயே கிண்டியில் செல்ல பிராணிகளுக்கென்று பிரத்யேகமாக அதிக பொருட்செலவில் எரிவாயு தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 05:24 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி செல்ல பிராணிகளுக்கும் எரிவாயு தகன மேடை! title=

சென்னை:  முதல் முறையாக தென் இந்தியாவிலேயே கிண்டியில் செல்ல பிராணிகளுக்கென்று பிரத்யேகமாக அதிக பொருட்செலவில் எரிவாயு தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  கிண்டியில் செயல்பட்டு வரும் ஒரு புளூ கிராஸ் அமைப்பின் சார்பாக தென் இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ. 57 லட்சம் செலவு செய்து வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்கான எரிவாயு தகன மேடை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. 

ALSO READ தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்த செல்ல பிராணிகளுக்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையினை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை வில்லிங்டன் நிறுவன தலைவர் எல்.கணேசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு திறந்து வைத்தார்கள். இதில் இந்திய புளூ கிராஸ் தலைவர் சின்னி கிருஷ்ணன், பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் உள்பட பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர். 

animal

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். பின்னர் இதுபற்றி சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறுகையில் , "செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்காக சென்னையில் முதன் முறையாக தகன மேடை அமைக்கப்பட்டது ஒரு சிறப்பான செயல். மேலும் தண்டையார்பேட்டையிலும் கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்படும். கால் நடைகளுக்காக இறுதி சடங்குகளை செய்யவும், அவற்றின் பராமரிப்பை மேம்படுத்தவும் மாநகராட்சிக்கு புளூ கிராஸ் மிகவும் உதவியாக இருக்கிறது.இவர்களின் இந்த முயற்சி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது"என்று கூறினார். மனிதர்களுக்கு மட்டுமே எரிவாயு தகன மேடை இருக்கும்பொழுது,செல்ல பிராணிகளையும் மதித்து அவற்றிற்கும் தகன மேடை திறக்கப்பட்ட இந்த வித்தியாசமான முயற்சிக்கு அணைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ALSO READ தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தடையில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News