மக்களவைத் தேர்தல்: AMMK 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

அமமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

Last Updated : Mar 22, 2019, 08:29 AM IST
மக்களவைத் தேர்தல்: AMMK 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!! title=

அமமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. 

AMMK வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

நாடாளுமன்றத் தேர்தலில் கணேசகுமார் வட சென்னையிலும், பழனியப்பன் தருமபுரியிலும், திருவண்ணாமலையிலும், செந்தமிழன் ஆரணியிலும், கோமுகி மணியன் கள்ளக்குறிச்சியிலும் போட்டியிடுகின்றனர்.  ஜோதி முருகன் திண்டுக்கல்லிலும், கார்த்திக் கடலூரிலும்,  தங்க தமிழ்செல்வன் தேனியிலும், பரமசிவ ஐயப்பன் விருதுநகரிலும், புவனேஸ்வரன் தூத்துக்குடியிலும், லெட்சுமணன்ட கன்னியாகுமரியிலும் போட்டியிடுகின்றனர். 

மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில், டி.ஜி.மணி சோளிகரிலும், ராஜேந்திரன் பாப்பிரெட்டிபட்டியிலும், தங்கதுரை நிலக்கோட்டையிலும் (தனி), காமராஜ் திருவாரூரிலும், ரெங்கசாமி தஞ்சாவூரிலும் போட்டியிடுகின்றனர். ஜெயக்குமார் ஆண்டிப்பட்டியிலும், கதிர்காமு பெரியகுளத்திலும், ஜோதிமணி விளாத்திகுளத்திலும், முருகசாமி தட்டாஞ்சாவடியிலும் (புதுச்சேரி) போட்டியிடுகின்றனர். 

AMMK இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விவரம்: 

இதே போன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் AMMK வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோளிங்கரில் டி.ஜி மணியும் பாப்பிரெட்டிபட்டியில் டி.கே.ராஜேந்திரனும் நிலக்கோட்டையில் ஆர்.தங்கதுரையும் போட்டியிடுகின்றனர். திருவாரூரில் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் அமமுக சார்பில் எம்.ரெங்கசாமி போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆர்.ஜெயக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பெரியகுளம் தனி தொகுதியில் டாக்டர் கே.கதிர்காமுவும் விளாத்திகுளம் தொகுதியில் டாக்டர் கே.ஜோதிமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி தட்டாஞ்டாவடி சட்டமன்ற இடைத் தேர்தலில் 
ந.முருகசாமி போட்டியிடுகிறார்.

 

Trending News