வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எல்லாம் தான் செய்தது போல் சொல்கிறார்கள் தாங்கள் தான் நம்பர் ஒன் என்று கூறிக் கொள்கிறார்கள் கஞ்சா போதை புழக்கத்திலே நம்பர் ஒன் ஊழலிலே நம்பர் ஒன் மது விற்பனையில் வரிமேல் வரி போடுவதில் நம்பர் ஒன் மக்களை வஞ்சிப்பதிலே நம்பர் ஒன் சொத்து வரி உயர்வு பத்திரப்பதி வரி உயர்வு பால் விலை உயர்வு இதில் தான் நம்பர் ஒன் என பட்டியலிட்டு பேசினார்.
மூன்றாவது முறையாக மோடி வெற்றி பெற்றால் வலுவான பாரதமாகவும் வல்லரசுமாகவும் அமையும் அதற்க்கு வலுவான தலைமை தேவை என பேசினர்.
மேலும் படிக்க | மோடி, அண்ணாமலை போட்ட ஷோ எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை - கலாநிதி வீராச்சாமி
இதன் பின்னர் செய்தியாளிடம் பேசிய ஜி.கே.வாசன், ஒவ்வொரு முறை மோடி தமிழகம் வரும் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை அதிகரித்துள்ளது ஜிகே மூப்பனார் இருக்கும்போது இருந்த காங்கிரஸ் வேற இப்போது இருக்கும் காங்கிரஸ் வேறு எங்களுடைய வெற்றி உறுதியாக உள்ளது அதைப் பொறுக்க முடியாமல் திமுகவும் அதிமுகவும் கள்ளத்தொடர்பு வைத்து எங்களை தோற்கடிக்க முயற்சி செய்வதுதான் உண்மை நிலை.
அமைச்சருக்கு பதில் உதயநிதி ஜோசியர் ஆகலாம் எந்த இடத்திலும் பேஸ் இல்லாமல் காங்கிரஸ் போட்டியிடும் போது வலுவாக இருக்கும் பாஜக எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் இந்தியா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவம் என கூறினார்.
மேலும் படிக்க | கோவில்பட்டியில் பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகியை திட்டிய வைகோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ