சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து இன்று திமுக ஆளும் கட்சியானது. ஆளும் கட்சியாக இருந்த அஇஅதிமுக இப்போது எதிர்கட்சி வரிசைக்கு வந்துவிட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் இன்று மிகப் பெரிய சலசலப்பும் வாக்குவாதமும் எழுந்தன. கட்சிக்கு ஒரே தலைமை வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்புஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்து முட்டிக் கொண்டனர்.
Also Read | Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியின் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் 63 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்கள் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரும் வைக்கும் பிரதான கோரிக்கை, கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் நாளிலேயே முன்னாள் ஆளும் கட்சியின் முன்னாள் முதல்வர்களின் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டன.
Also Read | CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR