இன்று ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்த சசிகலா அணி, ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று மாறி மாறி கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் ஓபிஎஸ் அணியினர் கூறியதாவது:-
தாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும், மேலும் டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் உள்ளதால் ஆர்.கே. நகரில் போட்டியிடும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது மாஃபா பாண்டியராஜன், செம்மலை, கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்தனர்.
தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2017
அடிப்படை உறுப்பினர்களால் சசிகலா அஇஅதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகவில்லை.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2017
தேர்தல் ஆணையத்திடம் அஇஅதிமுக சட்ட விதிகள் பற்றி எடுத்துரைத்தோம்.
எங்கள் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல பதில் அளிக்கும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2017
டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்கு உள்ளது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2017
We highlighted to EC that Sasikala's election as Gen Sec is contrary to the rules laid down by AIADMK
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2017