சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான நில அளவீடு பணிகள் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் சர்ச்சைகளும், போராட்டங்களுக்குப் பிறகு எட்டு வழிச்சாலை திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகள்; அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்படுமென ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது மீண்டும் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எட்டு வழி சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு எட்டுவழிச்சாலையில் உள்ள விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே எட்டு வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில் 8 வழிசாலை திட்டத்தை செயல்படுத்த முனைவதாகவும், ஏற்கனவே இந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் முழக்கமிட்டனர். உடனடியாக, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, எட்டுவழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று திமுக வாக்குறுதி அளித்ததாகவும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது காப்பாற்ற வேண்டும் என்றும் விவாயிகள் வலியுறுத்தினர். மேலும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை முடக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | ராதாகிருஷ்ணனிடம் உண்மை போட்டுடைத்த மக்கள் - சேலம் மருத்துவமனையில் என்ன நடந்தது ?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR