அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி (Thangamani) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தை விட 4.85 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 15 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் பூர்வீக வீடு உள்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ALSO READ | பழிவாங்கும் நடவடிக்கையால் அதிமுகவை அசைத்து விட முடியாது: முன்னாள் முதல்வர் ஆவேசம்
அந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2,37,34,458/-, தங்க நகைகள் 1.130 கிலோகிராம், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,16,37,000/-, சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
அதேசமயம் அன்றைய தினம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு மற்றும் ரெட்டிப்பட்டியில் உள்ள தங்கமணியின் நெருங்கிய நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலுவின் நட்சத்திர ஹோட்டல், குரங்குசாவடி பகுதியில் உள்ள அவரின் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது தங்கமணிக்கு சொந்தமான சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 14 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் தங்கமணியின் நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரமான குழந்தைவேலு என்பவரின் மகன் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏவிஆர் ஸ்ரீ கோகுலம் அப்பார்ட்மன்டில் குடியிருந்து வருகிறார். இன்று அதிகாலை முதல் 5 பேர் கொண்ட வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் ரெய்டு விவரம்:
* நாமக்கல் அழகுநகரில் உள்ள மோகன் என்பவரது வீடு
* எருமப்பட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில்ஸ் & அதன் உரிமையாளர் அசோக் குமார் வீடு
* நாமக்கல்லில் நக்ஷத்திரா அபார்ட்மெண்ட்
* நாமக்கல்லில் ஈஷா அப்பார்ட்மெண்ட்
* பள்ளிபாளையத்தில் ஆடிட்டர் செந்தில்குமார் என்பவரது வீடு
* பரமத்திவேலூர் அடுத்துள்ள பொத்தனூர் பகுதியில் தொழிலதிபர் சண்முகம் என்பவரது வீடு
* கொல்லிமலையில் பி.எஸ்.கே தங்கும் விடுதியில் சோதனை நடைபெறுகிறது.
ALSO READ | கிரிப்டோவில் முதலீடு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR