இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் திடீர் தற்கொலை!

தற்கொலை செய்துகொண்ட கோபிநாத் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2022, 03:47 PM IST
  • முக்கிய சாட்சியான வழக்கறிஞர் தற்கொலை
  • டிடிவி தினகரனுக்கு 8-ம் தேதி ஆஜராக சம்மன்
  • கோபிநாத் நாளை ஆஜராக வேண்டியது
இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் திடீர் தற்கொலை! title=

இரட்டை இலை சின்னம் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தினகரன் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

google

மேலும் படிக்க | லைக்கிற்காக சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர், வீடியோக்களை நீக்கிய காவல்துறை

இதனையடுத்து பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் சுகேஷை இந்த வழக்கிலும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பண மோசடி குறித்து அவரிடம் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இரட்டை இலை பெற்றுத் தர 2 கோடி ரூபாயை தினகரன் கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து வரும் 8-ம் தேதி இந்த வழக்கில் தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

google

இந்நிலையில் தினகரன் லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக கூறப்படும் வழக்கறிஞர் கோபிநாத் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை நாளை இவரிடம் விசாரணை நடத்த இருந்த நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு கோபிநாத் வீட்டிலும், அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாக தெரிகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறுகாரணமா என திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பிகள்!

தினகரன் இன்று அளித்த பேட்டி ஒன்றில், இரட்டை இலை வழக்கு சம்பந்தமாக தன்னை அமலாக்கத்துறை விசாரிக்க, முறையாக சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவேன் என தினகரன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News