ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சர்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சோனி மியூசிக் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ஏ. ரஹ்மான், ஏ ஆர் முருகதாஸ், யோகி பாபு மற்றும் நடிகர் விஜய் உட்பட பலர் மேடையில் பேசினார்கள்.
அப்பொழுது நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளர், நீங்கள் நிஜத்தில் முதலைமைச்சர் ஆனால் என்ன செய்வீங்க? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய், நிஜத்தில் முதல்-அமைச்சர் ஆனால், முதல்-அமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். லட்சம், ஊழல் போன்ற விசியங்கள் ஒழிப்பேன். ஆனால் இதை நூறு சதவீதம் ஒழிப்பேன் எனக் கூறுவது கஷ்டம். ஆனால் தலைவன் சரியாக இருந்தால், அந்தக்கட்சி சரியாக இருக்கும் எனக் கூறினார்.
இந்த கற்பனை கருத்து பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. அதுவும் குறிப்பாக ஆளும்கட்சியினர் விஜய்யின் பேச்சுக் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு அனைத்து உரிமைகளும் உள்ளது; புது வரவுகளுக்கு அச்சப்படும் நிலையில் அஇஅதிமுக இல்லை" என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு அனைத்து உரிமைகளும் உள்ளது; புது வரவுகளுக்கு அச்சப்படும் நிலையில் அஇஅதிமுக இல்லை - மாண்புமிகு அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன்.
— AIADMK (@AIADMKOfficial) October 3, 2018