நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று: ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி

சரத்குமார் தற்போது ஹைதராபாத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ராதிகா சரத்குமார் இந்த செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 05:12 PM IST
  • பிரபல தமிழ் நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • அவரது மனைவி ராதிகா சரத்குமார் இதை தெரிவித்தார்.
  • சரத்குமாருக்கு ஹைதராபாதில் சிகிச்சை நடக்கிறது.
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று: ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி title=

பிரபல தமிழ் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது ஹைதராபாத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் இந்த செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

“இன்று ஹைதராபாத்தில் சரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறி ஏதும் இல்லை. மிகவும் நல்ல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை குறித்து நான் அவ்வப்போது புதுப்பிக்கிறேன்” என்று ராதிகா (Radhika) ட்வீட் செய்துள்ளார்.

சரத் ​​குமாரின் மகள் வரலக்ஷ்மியும் (Varalakshmi) சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சரத்குமார் (Sarath Kumar) நடித்துள்ளார். 90-களில் மிகவும் பிரலமாக இருந்த நடிகர்களில் சரத்குமார் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் ஆவார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ள சரத்குமார் சமூக ஈடுபாடு கொண்டவர். தற்போது கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டிருக்கும் சரத்குமாருக்கு இதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ஹைதராபாதில் (Hyderabad) உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ALSO READ: COVID Vaccine-ன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் இங்கிலாந்தின் 90 வயதான Margaret Keenan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News