காவிரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலையை விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்

காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 31, 2018, 09:22 PM IST
காவிரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலையை விசாரித்த நடிகர் ரஜினிகாந்த் title=

காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். 

இந்நிலையில், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, அவரது வீட்டாரிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு அறுதல் கூறினார்.

Trending News