நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானில் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி ராஜஸ்தான் கொள்ளையர்களால் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டிருந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த கார்த்தி, தேவர்குளம் சாலைப்புதூர் கிராமத்தில் உள்ள பெரியபாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், பெரிய பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
With a heavy heart our #salute to you and your family sir. #Police #Periyapandian pic.twitter.com/AlerLpvf0X
— Actor Karthi (@Karthi_Offl) December 14, 2017
முன்னதாக, நகை கொள்ளையர்களை பிடிக்க குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் பெரியபாண்டியன் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பெரியபாண்டியனின் உடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான தேவர்குளம் சாலைப்புதூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெரியபாண்டியனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் நள்ளிரவில் 1.30 மணி அளவில் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெரியபாண்டியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.