சென்னை: உதவித் தொகை திட்டத்தின் கீழ்பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பராமரிப்பு உதவித் தொகை 2000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள்,அதிலும் குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 211391 நபர்கள் இத்திட்டத்தின் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பயனடைய விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டியலில் 24951 நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும், தற்போது மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனவே, இந்தத் திட்டத்தின் பயனை தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும், தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், உடல் குறைபாட்டின் தன்மை மற்றும் அதன் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், உதவித்தொகை வந்து சேர வேண்டிய வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு
இது தொடர்பான விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரிவிக்கும் பட்சத்தில் உதவித்தொகை அனைவருக்கும் விரைவில் வழங்க அரசு ஆவண செய்ய முடியும். மேலும், உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும், விரைவில் உதவித்தொகையை வழங்க ஏதுவாக அமையும்.
எனவே, மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை பராமரிப்பு உதவித் தொகை திட்டத்திள் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் விவரங்களைத் தெரிவிக்க ஏதுவாக அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் விலாசம்,தொலைபேசி எண் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
25676303 என்ற தொலைபேசி எண் மற்றும் secywdap@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு தொடருமா? அதிர வைக்கும் PERM கிரீன் கார்டு அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ