முதல் நாளில் மொத்தம் 22 பேர் வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

Last Updated : Mar 20, 2019, 10:15 AM IST
முதல் நாளில் மொத்தம் 22 பேர் வேட்புமனு தாக்கல்! title=

தமிழகத்தில் முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்குத் தமிழகத்தில் துவங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட தகவலில்:-

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 20 பேரும், பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட 2 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் நான்கு பேரும், தென் சென்னை தொகுதியில் மூன்று பேரும் மனுதாக்கல் செய்தனர்.

சுயேச்சைகள் 13 பேரும், அகிம்ஷா சோசலிஸ்ட் கட்சி, பீப்பில்ஸ் பார்டி ஆப் இந்தியா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒருவரும், சோசலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்தியா கட்சி சார்பில் நால்வர் என மொத்தம் 20 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு தெரிவித்தார்.

Trending News