கர்நாடகாவில் 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு 80,000 கனஅடியில் இருந்து 90,000 கனஅடியாக அதிகரித்தது!
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் கிடுகிடு என நிறைந்து வருகிறது.
இதையடுத்து, கர்நாடகாவில் 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு 80,000 கனஅடியில் இருந்து 90,000 கனஅடியாக அதிகரித்தது. கபினி அணையின் நீர்மட்டம்- 83.07 அடி, நீர்வரத்து விநாடிக்கு 55,000 கனஅடியாக உள்ளது.
கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம்-124.80 அடி, நீர்வரத்து விநாடிக்கு 12,710 கனஅடியாக உள்ளது. இதனால் காவரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!