குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% ஆக குறைப்பு!!

குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 18, 2020, 11:30 AM IST
    1. குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன
    2. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
    3. எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.
    4. கல்வித்தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% ஆக குறைப்பு!! title=

குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான பாடதிட்டங்கள் குழு அறிக்கையின் அடிப்படையில் 40% குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில்... குழு அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டி தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் கொரோனா முடிவுக்கு பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றார். அத்துடன் சனிக்கிழமைகளில் கல்வி தொலைக்காட்சியில் 6 மணிநேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்று அவர் கூறினார். 

ALSO READ | பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

நான்காம் கட்ட அன்லாக் (Unlock 4.0) மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு கூறியது. எனினும், மாநிலங்கள், கொரோனா (Coroana) தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும்,  மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பெற்றோர்கள் மற்றும் அவர்களது வார்டுகளின் ஆலோசனைகள் இல்லாமல் பள்ளிகளை மீண்டும் திறப்பது நடைபெறாது என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார்.

Trending News