மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் - திமுக அரசுக்கு மீனவர்கள் அறிவுரை!

தமிழக எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2022, 08:39 AM IST
  • 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.
  • எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கைது.
  • பத்திரமாக மீட்க கோரி உறவினர்கள் வேதனை.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் - திமுக அரசுக்கு மீனவர்கள் அறிவுரை! title=

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும் பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி நஷ்டத்தை ஏற்படுத்துவதும்  தொடரையாதையாகி வருகிறது.  இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து. மீன்பிடிக்கச் சென்ற நிலையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் வைத்து ஒரு படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை காரை நகர் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி வந்ததாக கூறி, சிறைப் பிடித்து விசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு செல்கின்றனர்.

மேலும் படிக்க: என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!

arrest

அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்தியா நிதி உதவி செய்வதோடு மட்டுமின்றி, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை இலங்கைக்கு உதவி செய்து அண்டை நாட்டுடன் நட்பு நாடாக இருந்து வருகிறது.  ஆனால், இங்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு,  மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், தமிழக மீனவர்களின் விவகாரத்தில்  ஸ்டாலின் அரசு அக்கறை காட்டுவதில்லை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் தமிழக மீனவர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.

boat

இதனால் கடந்த காலங்களை காட்டிலும்,  இந்த ஒரு வருட காலமாகவே தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு  அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர வேண்டும் என  மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News