தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 28, 2022, 12:02 PM IST
  • பொது வேலைநிறுத்தம் எதிரொலி
  • தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை
  • புறநகர் ரயிலில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி title=

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினால் பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில்  67% பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி15,335 பேருந்துகள் இயங்க வேண்டிய நிலையில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வெறும் 10 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டன. சென்னையில் 3,175 பேருந்துகளில் 318 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு , அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட  புற நகர்களிலிருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சென்னைக்கு பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று போக்குவரத்துக்காக புறநகர் ரயிலை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இதனால் புறநகர் மின்சார ரயில்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. 

மேலும் படிக்க | இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு

இன்று பொது வேலை நிறுத்தம் என்பதால் புறநகர் ரயில்களை பயன்படுத்துவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிந்திருந்தும் அதற்கேற்றவாறு கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், எப்போதும் போல் ஒரே ஒரு டிக்கெட் கவுண்ட்டரே செயல்பட்டதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையிலும் பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்பட்டு வருவது தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனினும், மக்களுக்கு பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொது வேலை நிறுத்தத்திற்காக மாநில அரசு முன்கூட்டியே திட்டமிட்டு மக்களின் போக்குவரத்துக்காக முறையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்டால் சம்பளம் கட்..போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News