பெரம்பலூரில் பிரபல நகைக்கடை உரிமையாளரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய மர்மநபர்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான, 105 சவரன் தங்கநகை 9கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரான கருப்பண்ணன் இவருக்கு பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே பூர்வீக வீடு உள்ளது. அதே போல எளம்பலூர் சாலையில் உள்ள ஜூவல்லிரியின் மாடியிலும் ஒரு வீடு உள்ளது. சங்குப்பேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் இரவு தங்கியுள்ளார். இவரது மகள் மனைவி ஆகியோர் நகை கடையின் மேல் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இவரது மகன் ஆனந்த் வேலை விஷயமாக திருச்சி சென்று விட்டார்.
ALSO READ கோடநாடு கொலை கொள்ளை வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி
இந்நிலையில் மகன் வந்துவிடுவதாக கூறியதால், கருப்பண்ணன் தனது வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11மணியளவில் முகமூடி அணிந்த நிலையில் காரில் வந்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அவரிடம் இருந்து பீரோ சாவியை வாங்கி, அதனை திறந்து பீரோவில் இருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 105 சவரன் தங்க நகைகளையும், 9 கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். சத்தம் போடக்கூடாது என்று மிரட்டிய கொள்ளையர்கள், கருப்ண்ணனனின் வீட்டு வாசலில் நின்றிருந்த அவரது சொகுசு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து கருப்பன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பழுதாகி விட்டநிலையில், சாலையில் உள்ள கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள் மிகவும் நெருக்கமாகவும், 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நகரின் மையப் பகுதியில், நடந்த இந்த கொள்ளை சம்பவத்தினால் பெரம்பலூரில் பொதுமக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
ALSO READ திருட்டிற்கு மூளையாக செயல்பட்ட ஏட்டு..அம்பலமான சதித்திட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR