பல ஆண்டுகளாக சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை துறைமுகத்துக்கு செல்லாமல் ஆந்திராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக செல்லத் தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டின் வருவாய் பாதிக்கப்பட்டு வந்தது.
இதனை தவிர்க்க கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை ₹1,655 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது.
அதன்படி மதுரவாயல் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் சுமார் 20 கிலோமீட்டர் நீளமுள்ள, 20-மீட்டர் அகலமுள்ள மேம்பாலத் திட்டம் 2007ல் அனுமதி பெற்றது. இத்திட்டம், ஜனவரி 2009ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022-23: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, முழு விபரம்
இந்த திட்டத்திற்கு பிப்ரவரி 2011 இல் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது, அதே மாதத்தில், துறைமுகம் திட்டத்திற்கான அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாக NHAI க்கு ₹50 கோடிக்கான காசோலையை வழங்கியது. இதற்கான பணிகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.
பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இப் பணி கிடப்பில் போடப்பட்டது. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடதக்கது.
இப்படியிருக்கையில், கடந்த மாதம் சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச் சாலைத் திட்டம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு இரண்டு மேம்பாலங்களைக் கொண்டிருக்கும் எனவும், புதிய வடிவமைப்பு ஒரு மாதத்தில் தயாராகிவிடும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து முதல்கட்ட தயாரிப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2022: இளைஞர் நலன் மற்றும் செஸ் ஒலிம்பியாட் எவ்வளவு ஒதுக்கீடு
இந்நிலையில் தற்போது மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
தெலுங்கான மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள 11.6 கிமீ நீளம் கொண்ட PVNR மேம்பாலம் தான் இந்தியாவின் மிகப்பெரிய பறக்கும் மேம்பாலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கட்டபடவிருக்கும் 20 கிமீ பாலமானது இந்த சிறப்பு பெயரைப் பெறவிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR