தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன், ஜூலை ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்யின் காரணமாக ஒட்டுமொத்தமாக 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இம் மழை இயல்பை விட 29 சதவிதம் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.