#18MLA-கள் தகுதி நீக்க வழக்கு: ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

Last Updated : Jul 25, 2018, 06:17 PM IST
#18MLA-கள் தகுதி நீக்க வழக்கு: ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!  title=

தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியை நியமித்தனர். புதிய நீதிபதி இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை (ஜூலை 23 ஆம் தேதி) முதல் விசாரணை செய்து வருகிறார். இவர் தொடர்ந்து 5 நாட்கள் இந்த வழக்கை விசாரணை செய்வதாகவும் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணையை துவக்கினர். அதில், தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 3, 6, 7 ஆம் தேதிகளில் உயர்நீதிமன்ற 3 ஆவது நீதிபதி விசாரிக்கிறார். இதை தொடர்ந்து, 5 நாட்கள் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.

 

Trending News