பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 09:41 AM IST
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு title=

தமிழக பள்ளிக்கல்வியின் பாட திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது. கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு. அத்துடன் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து 10, 11-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு (Public Exam) மதிப்பெண் மற்றும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை (School Education Department) அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கு SSLC தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

ALSO READ | புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா.. அரசு கூறுவது என்ன

இந்நிலையில் சமீபத்தில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அவர்.,

பிளஸ்-2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்தபடி, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் இருக்கிறது. நமது முதலமைச்சர் பிளஸ்-2 தேர்வு எப்போது வெளியிட சொல்கிறாரோ அன்றைய தினம் தேர்வு முடிவு வெளியிடப்படும். 

இதேபோல், மாவட்ட முதன்மை அலுவலர்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. அதில் அவர்களிடம் இருந்து பல்வேறு விதமான தகவல்கள் குறித்து கேட்க உள்ளோம். மேலும் இந்த கூட்டதில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ | மாநகராட்சி ஆணையர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News